2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

108 ஆம்புலன்ஸில் இளம் பெண்ணிற்கு சுகப் பிரசவம்

108 ஆம்புலன்ஸில் இளம் பெண்ணிற்கு செவ்வாய்கிழமை அதிகாலை சுகப்பிரசவம் நடைபெற்றது.சொக்கநாதன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி முத்து (18). 8 மாத கர்ப்பிணியாக இருந்த முத்துவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2014, 12:10 pm

கே.ஜெயக்குமார்

108 ஆம்புலன்ஸில் இளம் பெண்ணிற்கு செவ்வாய்கிழமை அதிகாலை சுகப்பிரசவம் நடைபெற்றது.சொக்கநாதன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி முத்து (18). 8 மாத கர்ப்பிணியாக இருந்த முத்துவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஓட்டுநர் எம்.ஆர்.பாலசுப்பிரமணி மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் கருப்பசாமி ஆகியோர் சொக்கநாதன்புதூர் சென்று முத்துவை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

அங்கு டாக்டர்கள், குழந்தை எடை குறைவாக இருப்பதாயும், முத்துவிற்கு போதுமான ரத்தம் இல்லை என்றும் கூறி, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறிவிட்டார்கள். இதனையடுத்து அதே 108 ஆம்புலன்ஸில் முத்துவை மதுரைக்கு அழைத்துச் சென்றனர். திருப்பரங்குன்றம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முத்துவிற்கு அதிக வலி ஏற்பட்டுள்ளது.

அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் ஒரு குழந்தை இருப்பதை அறிந்து அதனையும் எடுக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் சிரமமாக இருந்ததையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் அவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேர்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.