சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆள்கள் தேர்வு ஜூன் 19-ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவ உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்புக்கு பிறகு பி.எஸ்சி. (இளங்கலை அறிவியலில் உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், விலங்கியல், தாவரவியல், இதைச் சார்ந்த படிப்புகள்) முடித்தவர்கள், ஓராண்டு டிப்ளமோ, இரண்டு ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள், பி.எஸ்சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங் பயின்றவர்கள் தகுதியானவர்கள்.
இவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 19-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், அண்ணா பூங்கா பின்புறம் உள்ள சேலம் தமிழ்ச் சங்க நூலக முதல் மாடியில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் 20 வயது முதல் 30 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனிதவளத் துறை நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று முறைகளில் உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, ஆம்புலென்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி பெற வேண்டும்.
பயிற்சிக் காலத்தில் தங்கும் வசதி, தினசரி உணவுப் படி ரூ.100 வழங்கப்படும். பி.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்தவர்களுக்கு ரூ.8,976-ம், ஓராண்டு டிப்ளமோ மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.7,500-ம் மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
தகுதி உடைய நபர்கள், தங்களின் அனைத்து படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களுடன் வரும் 19-ம் தேதி நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 89398-54601, 89398-54606 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

