நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொலை செய்த இருவர் கைது
உளுந்தூர்பேட்டை வட்டம் கிளியூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் பாலகிருஷ்ணன்(35). இவர் கேரளாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிளியூருக்கு வந்தார். இவர் கடந்த


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகைக்கு ஆசைப்பட்டு நண்பரை கொலை செய்த வாலிபர்கள் இருவரை திருநாவலூர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம் கிளியூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் பாலகிருஷ்ணன்(35). இவர் கேரளாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிளியூருக்கு வந்தார். இவர் கடந்த 14-ம் தேதி எம்.குன்னத்தூரில் தனது நண்பர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த ஆனையன் மகன் சடையன்(26) மற்றும் அய்யன்பெருமாள் மகன் முருகன்(35) ஆகிய மூவரும் மது அருந்தினர். அப்போது பாலகிருஷ்ணன் அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு சடையன், முருகன் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணனின் கழுத்தில் மூன்று முறை மோட்டார் பைக் ஏற்றி பாலகிருஷ்ணனை கொலை செய்து, அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகளை கழற்றி சென்றதாக கிராம நிர்வாக அலுவலர் முன் சரணடைந்து தெரிவித்தனர்.
இதையடுத்த கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் இருவரையும் திருநாவலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்த போலீஸார் சடையன், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்தனர். நீதிபதி முத்துராமன் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...