மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பண்ருட்டி திருவதிகை அருகே இளைஞர் அடித்துக் கொலை

பண்ருட்டி திருவதிகையில் 25 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :20 ஜூன் 2014, 5:01 am

சீனிவாசன்

பண்ருட்டி திருவதிகையில் 25 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தில் வாழ்க்கார தெரு குட்டைத் தெரு சந்திப்பு அருகே உள்ள குப்பை தொட்டியில் சுமார் 25 மதிக்க தக்க இளைஞர் ஒருவர் உடலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அதே பகுதியை சேர்த கிருஷ்ணமூர்த்தி மீனா தம்பதியினரின் மகன் ரஞ்சித் மற்றும் அவரது தம்பியை கைது

செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருணமூர்த்தி உயிருடன் இல்லாதாதால் மீனா என்ற அவரது தாயுடன் ரஞ்சித்தும் அவர்து தம்பியும் பாண்டிச்சேரியில் வசித்து வருகின்றன.

இந்நிலையில்  திருவதிகையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ரஞ்சித்தும் அவரது தம்பியும் வந்துள்ளனர். ரஞ்சித் அவரது தம்பி மற்றும் கொலை செய்யப்பட்ட இளைஞர் ஆகியோர் பாட்டி வீட்டில்  தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொலையுண்ட இளைஞர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் கொலைசெய்யப்பட்ட இளைஞர் சத்யா என்றும் அவருக்கு வயது 30 இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்தவர். என தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியில் நடந்த கொலை வழக்கில் இவர் குற்றவாளி என கூறப்படுகிறது. ரஞ்சித் என்பவர் நேற்று கடலூர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த போது திருவதிகைக்கு சத்யாவை அழைத்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் திருவதிகை வந்து சத்யாவை தாக்கி கொலை செய்துள்ளனர்.  முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த கொலையில் ரஞ்சித்துக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.