6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை ரயில் நிலையத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு: எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. நெல்லை விரைவு ரயில், நெல்லை-தென்காசி பயணிகள் ரயில், நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரயில்

News image
Updated On :23 ஜூன் 2014, 10:19 am

முத்துகுமார்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. நெல்லை விரைவு ரயில், நெல்லை-தென்காசி பயணிகள் ரயில், நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரயில் போன்றவை நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் புறப்படுகின்றன. ரயில் பெட்டிகளில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்யவும், ரயில் பராமரிப்புப் பணிக்காகவும் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பிட்லைன் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு தொழில்நுட்பப் பணியாளர்கள் ரயில் பராமரிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். ரயில் பெட்டிகளை கழுவி சுத்தம் செய்வதற்காக ரயில் நிலையம் அருகே உள்ள 2 பெரிய கிணறுகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

ஊழியர்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தாமிரவருணி நதியின் குறுக்குத்துறை பகுதியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. நிரேற்று நிலையத்தில் இருந்து பிட்லைன் பகுதிக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றும் பொறுப்பினை எலக்ட்ரிக்கல் பிரிவினர் கவனித்து வருகின்றனராம். ஆனால், கடந்த சில நாள்களாக சரியாக தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படவில்லையாம். இதனால் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதிலும், தொழிலாளர்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்டித்தும், ரயில் நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் விநியோகத்தை சீராக வைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரியும் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.ஆர்.எம்.யூ. இளைஞர் பிரிவுச் செயலர் தமிழரசன் தலைமை வகித்தார். தாமரை, ராபின்சன், யோவான்ஸ்டீபன், இன்பராஜ் உள்பட ரயில்வேயின் மெக்கானிக்கல், சி.என்.டபிள்யூ. பிரிவு தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.