காட்டுயானைகளை விரட்ட பழனி வனத்துறை புதிய வகை அமைப்பு கண்டுபிடிப்பு
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவார கிராமங்களில் ஏராளமான மா, கொய்யா, தென்னந்தோப்புகள் உள்ளன. தற்போது நிலவி வரும் வறட்சியால் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள்


பழனியில் காட்டு யானைகளை விரட்ட பட்டாசு வெடிக்க புதிய வகை பைப்பை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவார கிராமங்களில் ஏராளமான மா, கொய்யா, தென்னந்தோப்புகள் உள்ளன. தற்போது நிலவி வரும் வறட்சியால் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் குடிநீர், உணவு தேவைக்காக அடிவாரத்துக்கு வந்து அவ்வப்போது சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதை தவிர்க்க வனத்துறை யானை வருவதை முன்னெச்சரிக்கையாக எச்சரிக்கும் அலாரம், சோலார் வேலி, அகழி ஆகியவற்றை பல இலட்சம் செலவில் அமைத்து வருகின்றனர். எனினும் பாலாறு, வரதமாநதி அணைக்கு தண்ணீர் வரும் பகுதிகளில் இவற்றை நிறுவ முடியாத நிலையில் அதன் வழியாக காட்டு யானைகள் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு வந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் தாரை, தப்பட்டை ஒலித்தும், பட்டாசு வெடித்தும் சிலமுறை பயனில்லாத நிலை உள்ளது. சமீப காலமாக ஒற்றையானை எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து வருவதால் பலரும் தப்பினால் போதும் என்ற நிலையில் ஓடிவிடுகின்றனர்.
இந்நிலையில் பழனி வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்ட புதிய யுக்தி மேற்கொண்டுள்ளனர். இதன்படி இரண்டரை இன்ச் விட்டமுள்ள கனமான மூன்று அடி இரும்பு குழாயில் ஒருபகுதியை அடைத்துவிட்டு மறுபகுதியை திறவையாக விட்டு விட்டு அதை ஏவுகணை போல கையில் ஏந்திக் கொள்ளும் வகையில் பிடியும் அமைத்து கருவி ஒன்று தயாரித்துள்ளனர். இந்த அமைப்பில் கைப்பிடி தவிர பிறபகுதியில் கனமான கயிறு கொண்டு சூடு தாங்குமாறு சுற்றியுள்ளனர். இதை காட்டுயானைகள் உள்ள இடத்துக்கு கொண்டு சென்று திறவையாக உள்ள குழாயின் உள்ளே நீளமான திரி உள்ள வெடியை பற்றவைத்து போட்டு விட்டு வெடிக்கும் முன் திருப்பி நேராக பிடிக்கின்றனர். அப்போது வெடி வெடிக்கும் போது பலத்த சப்தத்துடன் வெடிக்கிறது. தவிர குழாயின் உள்ளே கண்ணைக்கூசும் வெளிச்சமும் உண்டாகிறது. இதை பார்க்கும் காட்டுயானைக் கூட்டம் தலைதெறிக்க ஓடுகிறது. இந்த முறை பல இடங்களிலும் வெற்றியைத் தந்துள்ளது.
இதுகுறித்து ரேஞ்சர் கணேசன் தெரிவிக்கும்போது, காட்டுயானையை தடுக்க சோலார், அலாரம் முறை அமைத்தால் அவற்றை சேதம் செய்து விடுகிறது. புதிதாக சோலார் மூலம் போர்போட்டு தண்ணீர் வழங்கலாம் என்றால் அவற்றையும் சேதம் செய்து விடும். அகழிதான் மாற்று. ஆனால் அகழி அமைக்க முடியாத இடம் வழியாக குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இதற்காக நானும் பாரஸ்ட்டர்கள் வெங்கடேசன், தாருகாவனன் ஆகியோர் இந்த முறையில் வெடிக்க கண்டறிந்தோம். பீரங்கி, லாஞ்சர் போன்ற இந்த பைப் மூலம் வெடிக்கும் போது எந்த விபத்தும் நேராவண்ணம் கனமான இரும்பு குழாயில் வெப்பம் கைக்கு வராவண்ணம் கயிறு கட்டி வெடிக்கிறோம். வெடிக்கும் போது பலத்த சப்தம், வெளிச்சம் வருவதால் யானைகள் பயப்படுகிறது. வெடிக்கும் போது அதே வேகத்துக்கு பைப் பின்னே செல்லும் போது அதை தடுக்க கைப்பிடி வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...