6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 19,383 பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-2 பதவிக்கான போட்டித் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 6 தேர்வு

News image
Updated On :29 ஜூன் 2014, 10:30 am

முத்துகுமார்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை திருநெல்வேலி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 383 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-2 பதவிக்கான போட்டித் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 6 தேர்வு மையங்களின் கீழ் மொத்தம் 83 கல்வி நிலையங்களில் போட்டித் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுவதற்காக 28 ஆயிரத்து 374 பேருக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய தேர்வில் 19 ஆயிரத்து 383 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 8 ஆயிரத்து 991 பேர் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து ஆட்சியர் மு.கருணாகரன் கூறுகையில், இம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 383 பேர் போட்டித் தேர்வை எழுதியுள்ளனர். தேர்வுகள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வுப்பணிகளைக் கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 8 பறக்கும்படையும், 18 சுற்றுக் குழுக்களும், 98 ஆய்வுப்பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதோடு, காவல்துறையின் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்றார் அவர்.

திருநெல்வேலி மையத்தின் கீழ் 3,066 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 1,960 பேர் (63.92 சதவிகிதம்) மட்டுமே தேர்வு எழுதினர். அம்பாசமுத்திரம் மையத்தில் 3,069 பேருக்கு 2,133 பேரும் (69.50 சதவிகிதம்), பாளையங்கோட்டை மையத்தில் 9,043 பேருக்கு 6,018 பேரும் (66.54 சதவிகிதம்) தேர்வு எழுதினர்.

சங்கரன்கோவில் மையத்தின் கீழ் 4,492 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 3,326 பேர் (74.04 சதவிகிதம்) தேர்வு எழுதியுள்ளனர். தென்காசி மையத்தில் 6,935 பேருக்கு 4,818 (69.47 சதவிகிதம்) பேரும், வள்ளியூர் மையத்தில் 1,769 பேருக்கு 1,128 பேரும் (63.76 சதவிகிதம்) தேர்வு எழுதியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.