மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 644 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த முறை ஏராளமான பித்தளை விளக்குகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். சுமார் 40 கிலோ எடையிலான ஆள்உயர பித்தளை விளக்கு பலரையும் ஈர்த்தது. உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.