/

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லாததனை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில்

News image
Updated On :30 ஜூன் 2014, 9:18 am

ராஜேஷ் கண்ணன்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லாததனை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பட்டூர் மேலத்தெருவைச் சேர்ந்த 1- வது வார்டு மற்றும் 2- வது வார்டில் 1500- க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லாததனை திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோரிடம் பல முறை மனு செய்தும் அதிகாரிகள் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணிக்கு திருப்பட்டூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயிலான பிரம்மபுரீஸ்வரர் கோயில் முன்பு காலி குடங்களுடன் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் எம்.ஆர்.பாளையம் திருப்பட்டூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சமயபுரம் போலீஸார் ஆய்வாளர் மனோகரன் வந்திருந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.