கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மகன், மகள், மருமகள்களுடன் தீக்குளித்து தற்கொலை முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் மாயனூர் அடுக்க மேலகட்டளையைச் சேர்ந்த பொன்னுசாமியின் மனைவி வெள்ளையம்மாள்(70), மகன் சக்திவேல்(45), மகள் ஈஸ்வரி(40) மற்றும் மருமகள் நீலாம்பாள், பேத்திகள் காயத்திரி(11), மணிஷா(7) ஆகியோருடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மனு அளிக்க வந்ததார். அலுவலக நுழைவு வாயில் வந்ததும் திடீரென தனது கூடைப்பையில் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தன்மீதும், மகள் ஈஸ்வரி, மகன் சக்திவேல், மருமகள் மற்றும் பேத்திகள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்டு அங்கு நின்றிருநதவர்கள் உடனே மண்ணெண்ணை பாட்டிலை தள்ளிவிட்டனர். உடனே அங்கு காவல்பணியில் நின்றிருந்த போலீஸார் மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்துவிட்டு ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து மகேஸ்வரி கூறுகையில், எங்களுக்கு ஒன்றரை கானி நிலம் உள்ளது. சொந்த வீடும் உள்ளது. எங்கள் வீட்டையும், நிலத்தையும் ஊரில் உள்ள சங்கப்பிள்ளை என்கிற நபர் அபகரிக்க முயல்கிறார். இவர் மீது மாயனூர் காவல்நிலையத்தில் புகார் செய்துவிட்டோம். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. வீட்டில் உள்ள மின் இணைப்பைத்துண்டித்துவிட்டார். வீட்டிற்கு செல்லும் நடைபாதையையும் அடைத்துவிட்டனர். அவனுக்கு துணையாக அதே ஊரைச்சேர்த சேர்ந்த சிலர் உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

