நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் திருப்பாற்கடல் தீர்த்தக்குள ஆக்கிரமிப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்!

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்தக்குளம் ஆக்கிரமிப்பு சிதம்பரம் உதவிஆட்சியரும், உட்கோட்ட நிர்வாக நடுவதர் உத்தரவின் பேரகில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்

News image
Updated On :2 மார்ச் 2014, 9:18 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வேங்கான்தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்தக்குளம் ஆக்கிரமிப்பு சிதம்பரம் உதவிஆட்சியரும், உட்கோட்ட நிர்வாக நடுவதர் உத்தரவின் பேரகில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியதுதான் திருப்பாற்கடல் குளம். இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் ஆக்கிரமிக்கப்பட்டது. கடந்த 13-10-2008ல் இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் வாஞ்சிநாதன் என்பவர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் சிதம்பரம் உதவிஆட்சியரை அணுகி குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133-ன் கீழ் மனு செய்து நிவாரண தேடிக்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் கடந்த 2-10-2013ல் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் குளத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டது.

தற்போது இந்த ஆண்டு மீட்கப்பட்ட பகுதி மட்டும் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது. திருப்பாற்கடல் குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ள அம்பலத்தாடி மடத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் முற்றிலும் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவ்விடத்தின் ஒருபகுதியில் தனியார் பள்ளி நடைபெற்று வருகிறது. இறைவனால் உருவாக்கப்பட்ட திருப்பாற்கடல் குளம் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே திருப்பாற்கடலை முற்றிலுமாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் உதவிஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில் குளத்தின் ஒருபகுதியில் தனியார் பள்ளி நுழைவுவாயில் உள்ளது. தூர்வாரப்பட்ட குளத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி நிர்வாகம் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கியது. இதற்கு நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் சென்று, திருப்பாற்கடல் குளத்தில்தான் பள்ளி நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பினை அகற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. எனவே குளத்தில் தடுப்புசுவர் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடம் பேசி, தடுப்புச்சுவர் அமைப்பதை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாணலாம் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் குற்றவிசாரணை முறைச்சட்டம் பிரிவு 133 (1)-ன் கீழ் பள்ளி தாளாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவு விபரம்: சிதம்பரம் வேங்கான்தெரு வார்டு-3, பிளாக்-4, T.S.No.216-nd 0.0617 ச.மீ (6641 ச.அடி) பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் அமைந்துள்ளது. வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நகர அளவர் ஆகியோர் மூலம் புலத்தணிக்கை செய்து அறிக்கை பெறப்பட்டது. மேற்படி இடம் 6641 ச.அடி பரப்பளவில் திருப்பாற்கடல் குளம் உள்ளது. இதில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் 3 ஆயிரம் சதுரஅடி ஆக்கிரமிப்பு செய்து சிமெண்ட் ஷீட் கொட்டகை போட்டு ஆக்கிரமித்துள்ளது. எனவே மேற்படி இடம் நீர்வழி புறம்போக்கு என்பதால், இந்த இடம் பொதுமக்கள் நலன் கருதி பொதுநன்மைக்காக பயன்படுத்தக்கூடியது. மேற்படி ஆக்கிரமிப்பு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே திருப்பாற்கடல் குளம் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள சிமெண்ட் ஷீட் கொட்டகையை பிப்.26-ம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு உரிய அவகாசம் அளித்தும், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்படாததாலும், நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு உள்ளதாலும் இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் 138 (2)-ன் கீழ் திருப்பாற்கடல் ஆக்கிரமிப்பினை அகற்ற இறுதி ஆணையை உதவிஆட்சியர் மார்ச் 1-ம் தேதி பிறப்பித்தார். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திருப்பாற்கடல் குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த தனியார் பள்ளி தகர ஷீட்டால் அமைக்கப்பட்டது கொட்டகை மற்றும் தடுப்புச்சுவர்களை அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.