பிளஸ்டூ தேர்வு: சிதம்பரம் நகரில் 2912 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்
தமிழகம் முழுவதும் இன்று மார்ச் 3-ம் தேதி அரசு பொதுத்தேர்வான பிளஸ்டூ தேர்வு தொடங்குகிறது. சிதம்பரம் பகுதியில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 1399 மாணவர்களும், 1513 மாணவியர்களும் 7 தேர்வு


சிதம்பரம் பகுதியில் இன்று தொடங்கப்படும் பிளஸ்டூ தேர்வில் 2912 மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று மார்ச் 3-ம் தேதி அரசு பொதுத்தேர்வான பிளஸ்டூ தேர்வு தொடங்குகிறது. சிதம்பரம் பகுதியில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 1399 மாணவர்களும், 1513 மாணவியர்களும் 7 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளுக்குமே பிற பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் பகுதி பள்ளிகளை மட்டும் கண்காணிக்க 34 மூத்த ஆசிரியர்களை கொண்ட 17 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பதற்றமின்றி அமைதியாக தேர்வு எழுதும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் பகுதி 7 தேர்வு மையங்கள் விபரம்: அரசின் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...