பொதுக்கூட்டம் மேடை மற்றும் ஹெலிபேட் அமைக்கும் பணியை நிதிஅமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி ஆகியோர் திங்கள்கிழமை அப்பகுதியில் முகாமிட்டு பொதுக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்களுடன் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஏ.அருண்மொழித்தேவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.