/

பண்ருட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 97 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதி நாடுமுழுவதும் நடைமுறையில் உள்ள நிலயில் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2014, 1:38 pm

சீனிவாசன்

பண்ருட்டி அருகே பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ரூ.97,600-ஐ பறிமுதல் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா செய்ய கார், வேன்களில் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட புள்ளியியல் ஆய்வாளரும், பறக்கும்படை அலுவலருமான தங்க.சுதர்சனம் தலைமையில் காவல் துறையினரும் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை திருவாமூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தனர். இதில் கோவை சக்தி பைனான்ஸின் சந்தையிடுகை அதிகாரி (கள்ளகுறிச்சி) தங்கவேல் என்பவரின் தோல் பையை சோதனை செய்தனர். அதில் கணக்கில் வராமல் இருந்த ரூ.97,600-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இப்பணம் லாரி,வேன்களுக்கு வழங்கப்பட்ட கடன் வசூல் பணம் என தெரிவித்தார்.

இதுகுறித்து பண்ருட்டி வட்டாட்சியர் பி.ராஜாராமன் கூறியது: பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்களைக் காட்டினால், உடனடியாகத் திருப்பித் தரப்படும். இல்லாதபட்சத்தில் பணம் 24 மணி நேரத்துக்குள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.