தலைமைச் செயலாளர் மாற்றல் பிரச்னை- மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம்: அதிமுக- திமுக வலியுறுத்தல்
தலைமைச் செயலாளர் மாற்றல் பிரச்னை தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக, திமுக உறுப்பினர்கள்


தலைமைச் செயலாளர் மாற்றல் பிரச்னை தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக, திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரசின் 6 மாத செலவுகளுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
அப்போது பேசிய அதிமுக பேரவைக் கட்சித்தலைவர் அன்பழகன், அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து என்பதை ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் துணை நிலை ஆளுநர் உரையில் தெரிவிப்பது வழக்கம்.
ஆனால் அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் உள்ள மோதல் காரணமாக ஆளுநர் உரையை அரசு புறக்கணித்துள்ளது. கடந்த 3 ஆண்டாக தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டையே அரசு தாக்கல் செய்துவருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது எனத் தெரிந்தும் இடைக்கால பட்ஜெட் போட வேண்டிய அவசியம் என்ன
கடந்த ஜனவரி மாதமே கூட்டத்தொடரை முழுமையாக நடத்தியிருக்கலாம். கடந்த ஆண்டு கூடுதல் செலவின விவரங்களை உறுப்பினர்கள் படித்துப்பார்க்க குறைந்தது 48 மணிநேரம் அவகாசம் தர வேண்டும்.
அதைக்கூட தராமல் கையெழுத்து போடும்படி நிர்பந்தம் செய்வது ஏன் தேர்தல் தேதி அறிவித்த நிலையில் மத்திய அரசு தலைமை செயலாளரை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை மாநில அரசு எப்படி அனுமதிக்கிறது மத்திய அரசின் இந்த செயல்பாட்டை கண்டித்து இந்த கூட்டத்தொடரிலேயே அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் நாஜிம், இதேநிலை தொடர்ந்தால் எந்த அதிகாரியும் புதுச்சேரியில் அரசு பணிக்கு வர விரும்பமாட்டார்கள். தலைமை செயலாளர் மாற்றம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக உறுப்பினர் தீர்மானம் கொண்டுவந்தால் அதை திமுக ஆதரிக்கும் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் என்பது வழக்கமான மரபுதான். தேர்தல் நேரத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தினாலும் அதில் எந்த அறிவிப்புகளும் இடம்பெறாது.
தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அப்போது உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதில் தர தயாராக உள்ளது. தலைமை செயலாளரை மாற்றவுள்ளதாக மத்திய அரசு ஒரு முடிவெடுத்தது. இந்த மாற்றம் தேவையில்லை என மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...