நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மாணவரை தாக்கியதாக, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் தீரன் (15). இவர் தேரடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம்

News image
Updated On :14 மார்ச் 2014, 12:47 pm

ஜி.சுந்தரராஜன்

மாணவரை தாக்கியதாக, சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் தீரன் (15). இவர் தேரடி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். சம்பவத்தன்று பள்ளி கட்டணம் ரூ.25 ஆயிரத்தில், ரூ.5 ஆயிரம் பாக்கித் தொகையை கட்ட வேண்டும் என தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் மாணவரிடம் கேட்டதாகவும், அதற்கு அம்மாணவர் தாளாளர் பரிந்துரைத்த கையொப்பமிட்ட கடிதத்தை காண்பித்ததாகவும் தெரியவருகிறது.

கடிதத்தை பார்த்த தலைமை ஆசிரியர், அக்கடிதத்தில் தாளாளருடைய கையெழுத்து இல்லை.வேறு யாரோ கையெழுத்து போட்டுள்ளார் என மாணவரை கண்டித்து திட்டி, பெரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவருக்கு முகத்தில் கண்ணுக்கு அருகாமையில் காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவர் தீரன் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.