கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமதாஸின் நடவடிக்கையால் வன்னியர்கள் தனிமைபடுத்தப்படுகிறார்கள்:கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

ராமதாஸின் சாதி நடவடிக்கையால் வன்னியர்கள் மற்ற சமுகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.

News image
Updated On :18 மார்ச் 2014, 1:02 pm

ரவி

ராமதாஸின் சாதி நடவடிக்கையால் வன்னியர்கள் மற்ற சமுகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கே.அசோக்குமரை ஆதரித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியது: கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த 54 தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் 33 மாதத்தில் நிறைவேற்றி உள்ளார்.

 சாதனை மிகுந்த இந்தத் திட்டங்களால் தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இத்தகைய நிலை இந்தியா முழுவதும் நிறைவேற்ற வேண்டும் என்றால் ஜெயலலிதா பாரத பிரமராக வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. ஆனால், திமுக, பாஜக தலைமையிலான கூட்டணிகள் கொள்கை முரண்பாடுகள் கொண்டுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸின் சாதி நடவடிக்கையால் வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாய மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்றார்.

சூளகிரி கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலகொண்டராயதுர்கம் கிராமத்தில் மேலுமலை, பிக்கனப்பள்ளி,சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, புளியரசி, ஜோகிர்பாளையம், சூளகிரி, வேம்பள்ளி உள்ளிட்ட 79 கிராமங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் புரசை கோ.செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் முனிவெங்கடப்பன், ஒன்றியச் செயலாளர் தாயப்பன் உள்ளிட்டோ உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.