புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தலை பெரிதாக இருந்ததால் பெண் குழந்தையைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சீத்தகாட்டனூர் என்ற இடத்தில், குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றார் வளர்மதி ஒரு பெண். இதில், அந்தக் குழந்தை இறந்தது. பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

News image
Updated On :19 மார்ச் 2014, 9:54 am

அருள்

கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சீத்தகாட்டனூர் என்ற இடத்தில், குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றார் வளர்மதி ஒரு பெண். இதில், அந்தக் குழந்தை இறந்தது. பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

குழந்தை பிறந்தபோது தலை சற்று பெரிதாக இருந்ததாம். இதனால் குழந்தைக்கு வளர்ச்சி சரியாக இருக்காது என்ற வருத்தத்தில் இருந்தாராம். குழந்தை இவ்வாறு கவனிப்பு இல்லாமல் பிறந்ததற்கு தனது மாமியாரும் தாயும்தான் காரணம் என்று புலம்பிக் கொண்டிருந்தாராம்.

இந்நிலையில் வளர்மதி தனது 4 மாதக் குழந்தை சுர்ஜிதாவுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் கொடுத்த குழந்தை இறந்துவிட்டது. தற்கொலைக்கு முயன்றவரை மருத்துவமனையில் அருகில் உள்ளோர் சேர்த்துள்ளனர். அவர் உயிர் பிழைத்துவிட்டார் என்றாலும் சிகிச்சையில்  உள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.