டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கார் மோதி முதியவர் பலி: இருவர் காயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதி முதியவரான அங்கமுத்து(55) பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

News image
Updated On :24 மார்ச் 2014, 10:56 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதி முதியவரான அங்கமுத்து(55) பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த குள்ளன் மகன் அங்கமுத்து. விவசாய கூலியான இவர் அவரது மனைவி ராதாவுடன் பூவலம்பேட்டில் உள்ள வங்கியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ததற்கான கூலியை வாங்க சென்று வங்கி முன் சாலையோரம் நின்றிருந்தார்.

அப்போது கவரப்பேட்டையில் இருந்து சத்தியவேடு நோக்கி வந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தவர்கள் மீது  மோதியது. இந்த விபத்தில் அங்கமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் அங்கமுத்துவின் மனைவி ராதா மற்றும் பூவலம்பேடு பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் மோகனா(9) என்ற சிறுமியும் காயமடைந்தனர். விபத்து நடந்ததும் காரை ஓட்டி வந்தவர் ஓட்டம் பிடித்தார்

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் கூடிய தேர்வாய் பகுதி பொதுமக்கள் விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதிரிவேடு போலீஸôர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதன் பிறகு விபத்தில் பலியான அங்கமுத்துவின் உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காயமடைந்த ராதா மற்றும் சிறுமி மோகனா ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் விசாரணை நடத்தி வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.