பாமக வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: ரங்கசாமி
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுகிறார்.


புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளரை திரும்பப் பெறச் செய்வது குறித்து அக்கட்சித்தலைவர் ராமதாசுடன் பேச்சு நடத்தப்படும் என அம்மாநில முதல்வரும் , என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுகிறார். இதை பா.ஜ.க. தலைவர்களும் உறுதி செய்துள்ளனர்.
பா.ம.க. வேட்பாளர் அனந்தராமனை தேர்தலில் இருந்து திரும்பப் பெறச் செய்வது தொடர்பாக அக்கட்சித் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளேன்.
என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற கூட்டணி கட்சிகள் முழுமையாக ஆதரித்து தேர்தல் பணிபுரிய வேண்டும். விரைவில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.கூட்டணி கட்சிகளோடு இணைந்து பிரசாரம் செய்வதற்கான பணிகள் விரைவில்தொடங்கும் என்றார். தனது அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி படம்தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பது குறித்த எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...