/

பண்ரூட்டியில் ஆர்பாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 28 பேர் கைது

பண்ருட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு ஆர்பாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 28 பேரை புதுப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :27 மார்ச் 2014, 5:08 am

சீனிவாசன்

பண்ருட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு ஆர்பாட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 28 பேரை புதுப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

பண்ருட்டி சேலம், நெடுஞ்சாலையில் உள்ள அங்குசெட்டி பாளையத்தில் செயல்பட்டு வரும் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லுரியில் பயிலும் எஸ்.சி எஸ்.டி மற்றும் ஆதிதிராவிட கிருஸ்துவ மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதாக தெரிய வருகிறது இதற்கு எதிரிப்பு தெரிவித்து மாவட்ட புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி சங்கத்தினர் பாலிடெக்னிக் மாணவர்களுடன் இணைந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாடம் நடத்தினர்.

இதில் எஸ்.சி எஸ்.டி மற்றும் ஆதிதிராவிட  கிருஸ்துவ மணவர்கள்களிடம் பெற்ற கல்வி கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் கல்வி கட்டணம் பெறாமல் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அரசின் உத்தரவை மதிக்காத கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகல்ளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.