ரூ.10 லட்சம் மதிப்பிலான சாமி விக்ரகங்கள் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள்அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்கு பணமோ பொருளோ வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள்அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்கு பணமோ பொருளோ வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறது.
பண்ருட்டி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகள் நடத்தியதில் சில நபர்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரொக்கம் மற்றும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், வீரப்பெருமாநல்லூர் அருகே வட்டாட்சியர் குமுதம் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே சென்ற ஆம்னி வேனில் சோதனை செய்ததில் சுமார் இரண்டடி உயரம் உள்ள முழுமை பெறாத அம்மன் சிலை, முக்கால் அடி உயரமுள்ள 6 பெருமாள் விக்ரகங்கள் மற்றும் சாமிக்கு அலங்காரத்துக்குப் பயன்படும் ஆபரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கடலூர் மாவட்டம் வரக்கால்பட்டுவைச் சேர்ந்த தரணி கலைக்கூடம் ஸ்தபதி வடிவேல் ஆச்சாரியாரிடம் விசாரித்த போது, இவைகள் முழுக்க முழுக்க பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன சிலை மற்றும் ஆபரணங்கள் என்றும், தன்னுடைய கலைக்கூடத்தில் தயாரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி சித்தலூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்வதாகவும், கூறினார்.
இதையடுத்து, பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...