நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆக்கிரமிப்பு செய்து, அரசியல் கட்சி அலுவலகம் துவங்கக்கூடாது: சிதம்பரம் உதவிஆட்சியர் அறிவிப்பு

எந்த ஒரு அரசியல் கட்சியும் பொதுமக்களுக்கு சொந்தமான அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் அரசியல் கட்சி தேர்தல் அலுவலகம் தொடங்கக்கூடாது என சிதம்பரம்

News image
Updated On :31 மார்ச் 2014, 3:14 pm

ஜி.சுந்தரராஜன்

எந்த ஒரு அரசியல் கட்சியும் பொதுமக்களுக்கு சொந்தமான அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் அரசியல் கட்சி தேர்தல் அலுவலகம் தொடங்கக்கூடாது என சிதம்பரம் நாடாளுமனறத் தொகுதி உதவித் தேர்தல் அதிகாரியும், உதவிஆட்சியருமான எம்.அரவிந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பாகவும், உள்ளூர் பிரசாரம் தொடர்பாகவும், தற்காலிக அலுவலகங்கள் அமைப்பதாக தகவல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றி அந்த அலுவலகங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

விதிமுறைகள்: எந்த ஒரு அரசியல் கட்சியும் மதசம்பந்தமான வழிபாட்டுத் தலங்களிலோ, வழிபாட்டு தலங்கள் அமைந்த எல்லைக்குள்ளோ அலுவலகங்களை அமைத்தல் கூடாது, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகாமையிலோ, மேற்படி வளாகத்திலோ கட்சி அலுவலகங்கள் தொடங்கக்கூடாது, வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களிலிருந்து 200 மீட்டருக்கு உட்பட்ட இடத்தில் கட்சி அலுவலங்கள் தொடங்கப்படக்கூடாது, மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும் கட்சி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட கட்சி தொடர்பாக சின்னம் அல்லது புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரே, ஒரு கொடி, பேனர் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பேனர்கள் 4-8 அடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.