/

தண்ணீர் பற்றாகுறை: கிராம மக்கள் சாலை மறியல்

பண்ருட்டி ஒன்றியம் உட்பட்ட அங்குசெட்டிபாளையம் ஊராட்சியில் பத்மசாலியர் நகர் ,ஓடைதெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை நிலவிவந்ததன.. இதனால் பாதிக்கப்ட்ட அப்பகுதி

News image
Updated On :31 மார்ச் 2014, 2:02 pm

சீனிவாசன்

பண்ருட்டி ஒன்றியம் உட்பட்ட அங்குசெட்டிபாளையம் ஊராட்சியில் பத்மசாலியர் நகர் ,ஓடைதெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை நிலவிவந்ததன.. இதனால் பாதிக்கப்ட்ட அப்பகுதி மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கடலூர் -சித்தூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸார் தலையிட்டு சமரசம் செய்தனர். இது குறித்து ஊராட்சி தலைவர் ரோஸ்மணி சுப்ரமணியன் கூறியபோது, இப்பகுதியில் ஏற்கெனவே உள்ள 2 ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு அரசு உயர் நிலை பள்ளி அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் ஏற்றி தண்ணீர்  வினியோகம் செய்யப்பட்டது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் நீர் கிடைக்கவில்லை. மேலும் புதிதாக போடபட்ட ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் ஏற்றப்படுகிறது.இதனால் இனி தண்ணீர் பிரச்னை ஏற்படாது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.