திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் திருவாசக முற்றோதல் விழா தொடக்கம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் திருவாசக முற்றோதல் தொடக்கவிழா மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது வழிப்பாட்டு மன்ற ஒருங்கினைப்பாளர் சிவ.ச.இராஜாமணி மங்கல விளக்கினை ஏற்றிவைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசியது:
திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் திருவாசக முற்றோதல் விழா தொடக்கம்
Updated on
1 min read

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் திருவாசக முற்றோதல் தொடக்கவிழா மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது வழிப்பாட்டு மன்ற ஒருங்கினைப்பாளர் சிவ.ச.இராஜாமணி மங்கல விளக்கினை ஏற்றிவைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசியது:

தமிழை போற்றி வளர்த்த மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூரில் ஆதிசைவ அந்தணர் மரபில் சம்புபாதாசிருதர் சிவஞானவதி அம்மையார் செய்த அருந்தவப்பேற்றால் மாணிக்கவாசகர் என்னும் வாதவூரடிகள் அவதரித்தார் இவரது திறமையை தெரிந்து கொண்ட மதுரை அரசன் அதிமர்த்தன பாண்டியன் இவர்க்கு தென்னவன் பிரமராயன் என்னும் பட்டத்தை வழங்கி மகிழ்ந்ததோடு சோழநாட்டில் உள்ள கடற்கரைக்கு வந்த குதிரைகளை வாங்கிவர பெரும்பொருளோடு வாதவூரரை மன்னன் அனுப்புகிறான் செல்லும் வழியில் ஆவுடையார்கோயில் எனவழங்கும் திருப்பெருந்துறையில் சிவபெருமான் வாதவூரை ஆட்கொள்ள வேண்டி ஒரு சிவ முனிவரின் திருக்கோலங்கொண்டு சிவகணங்கள் சூழ குருந்த மரத்தடியில் சிவஞானப்பொருளை உணர்த்திக்கொண்டிருந்தார்

அதனைக்கண்ட வாதவூரர் காந்தம் கண்ட இரும்பு போல் ஈர்க்கப்பெற்று தம்வசம் இழந்து குருமூர்த்தியின் திருவடிகளில் வீழ்ந்து தம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டினார் இறைவன் அவர்க்கு ஞானதீட்சை செய்து உண்மைப்பொருளை உபதேசித்து அருளினார் அதுபோது மாணிக்கமெனத் திகழ்ந்த வாசகத்தை பல பாடலாக வாதவூரார் பாட குருநாதர் அதனைக்கேட்டு

மகிழ்ந்து அவர்க்கு மாணிக்கவாசகர் என்னும் திருநாமம் சூட்டினார் இது போன்ற பல வரலாறுகளை பெற்றோர்கள் தெரிந்துக்கொண்டு இப்போதுள்ள இளம்தலைமுறையினர்க்கு புரியவைப்பது அவசியம் என்றார் நிகழ்ச்சியில் சிவபுராணம் கீர்த்தித் திருஅகவல்

திருவெம்பாவை அடைக்கலப்பத்து சென்னிப்பத்து ஆனந்தமாலை அச்சோப்பத்து போன்ற 51வகையான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகங்களை சிவனாடியார்கள் பாடினர் விழாவில் புதுக்கோட்டை அறந்தாங்கி ஆவுடையார்கோவில் திருப்புனவாசல் ஆலங்குடி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மீனாட்சி சுந்தரம் பொன்னையா குமார் கண்னன் ஆகியோர் செய்து இருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com