மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூரில் 2 வது நாளாக தொடரும் மழை: காணாமல் போனது கத்தரி வெயில்

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 வது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்து வருவதால், கத்திரி வெயிலின் தாக்கம் காணமல் போய் விட்டது.

Updated On :5 மே 2014, 5:43 am

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 வது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்து வருவதால், கத்திரி வெயிலின் தாக்கம் காணமல் போய் விட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ஞாயி்ற்றுக்கிழமை காலையில் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில்  மழைப் பெய்தது.  இதனால் கத்தரிவெயில் தொடக்க நாளில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

 மதியத்துக்குப் பிறகு இரவு வரை லேசான குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழைப் பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து சிறிது நேர இடைவெளி விட்டு விட்டு காற்று வீசாமல்,  இடி, மின்னல் இல்லாமல் மழை பெய்து வருகிறது.  இந்த மழை காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடி.யாமல் வீட்டிற்குள்ளேய முடங்கி கிடக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டர்): அண்ணாமலைநகர் 51, சிதம்பரம், கொத்தாவாச்சேரி 49, விருத்தாசலம் 48.30, காட்டுமன்னார்கோயில் 46, லால்பேட்டை 36, புவனகிரி 28, சேத்தியாத்தோப்பு 24.20, பரங்கிப்போட்டை 24, வானமாதேவி 21, கடலூர் 16.40, ஸ்ரீமுஷ்ணம் 15, பண்ருட்டி, மே.மாத்தூர் 2 என மாவட்டத்தில் மொத்தம் 411.90 மில்லி மீட்டர், சராசரியாக 19.61 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.