47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை மாவட்டத்தின் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 87.95 கடந்த ஆண்டை விட 3.24 சதவீதம் அதிகம் 

நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டத்தில் 87.95 சதவீதம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

News image
Updated On :9 மே 2014, 8:08 am

சங்கர்

நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டத்தில் 87.95 சதவீதம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 3.24 சதவீதம் அதிகம். நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் 7,132 மாணவர்களும், 9,958 மாணவிகளும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 6,016 மாணவர்களும், 9,013 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை- 15,029. இதன் தேர்ச்சி சதவீதம் 87.95.  கல்வி மாவட்ட அளவில்... நாகை கல்வி மாவட்டத்தில் 53 பள்ளிகளைச் சேர்ந்த 3,020 மாணவர்களும், 4,132 மாணவிகளும் தேர்வு எழுதினர்.

இதில், 2,586 மாணவர்களும், 3,797 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி வீதம் 89.25.  மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 59 பள்ளிகளைச் சேர்ந்த 4,112 மாணவர்களும், 5,826 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், 3,430 மாணவர்களும், 5,216 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 87. நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 83.41 சதவீதம் பேரும், மாணவிகள் 89.53 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். நாகை கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் 85.63 சதவீதம் பேரும், மாணவிகள் 91.89 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்டம் கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 84.71 சதவீதம் தேர்ச்சிப் பெற்றிருந்தது. நிகழாண்டில் 87.95 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதன் மூலம் தேர்ச்சி வீதம் 3.24 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.