நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாணவிகள் முதலிடம்
நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்ட அளவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட மாணவிகள் முதல் 3 இடங்களையும் பெற்றுள்ளனர்.


நாகை, மயிலாடுதுறை ஆகிய 2 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய நாகை வருவாய் மாவட்ட அளவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட மாணவிகள் முதல் 3 இடங்களையும் பெற்றுள்ளனர்.
நாகை வருவாய் மாவட்ட அளவில், மயிலாடுதுறை ராஜ்மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி டி. தேவ அபிநயா 1,180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். மதுவந்தி, சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். பிந்தியா ஆகியோர் தலா 1,179 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி. வைஷாலி 1,178 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். மாணவிகளின் மதிப்பெண்கள் விவரம் :
முதலிடம் டி. தேவஅபிநயா
மாவட்ட அளவில் முதலிடம் மயிலாடுதுறை ராஜ்மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி டி. தேவ அபிநயாவின் மதிப்பெண்கள் : தமிழ்- 194, ஆங்கிலம்- 194, இயற்பியல்- 199, வேதியல்- 197, உயிரியல்- 197, கணிதம்- 199. மொத்தம்- 1,180.
இவரது தந்தை தம்பித்துரை தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளர். தாய் உஷா. மருத்துவம் பயில விருப்பம் என்றார் மாணவி டி. தேவ அபிநயா.இம்மாணவிக்கு பள்ளித் தாளாளர் ஜெயலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இரண்டாமிடம்
மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். மதுவந்தியின் மதிப்பெண்கள் விவரம் : தமிழ்- 194, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 200, வேதியல்- 199, உயிரியல்- 197, கணிதம்- 198. மொத்தம்- 1,179.
இவரது தந்தை எம்.எஸ். சிவக்குமார், தாய்- சித்ரா. மருத்துவம் பயில விருப்பம் என்றார் மாணவி எஸ். மதுவந்தி. இம்மாணவிக்கு, பள்ளித் தாளாளர் பெர்ணாடு, ஆலோசகர்கள் கருணாநிதி, திருவேங்கடம், முதல்வர் ஆர். லோகநாதன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர். பிந்தியாவின் மதிப்பெண்கள் விவரம் : தமிழ்- 191, ஆங்கிலம்- 194, இயற்பியல்- 200, வேதியல்- 198, உயிரியல்- 197, கணிதம்- 199. மொத்தம்- 1,179இவரது தந்தை ராமைய்யன் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். தாய் மலர்விழி. மருத்துவம் பயில விருப்பம் என்றார் மாணவி ஆர். பிந்தியா.
மூன்றாமிடம்..
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி. வைஷாலியின் மதிப்பெண்கள் விவரம் : தமிழ்- 189, ஆங்கிலம்- 191, இயற்பியல்- 200, வேதியல்- 198, உயிரியல்- 200, கணிதம்- 200. மொத்தம்- 1,178.
இவரது தந்தை பஞ்சாபகேச ரவீந்திரன் பூம்புகார்க் கல்லூரி பேராசிரியர். தாய் சாந்தி. கட்டடக் கலை பயில விருப்பம் என்றார் மாணவி வைஷாலி.
இம்மாணவிக்கு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம், பள்ளி ஆட்சிக் குழுத் தலைவர் சீனிவாசன், முதல்வர் குணசேகரன், ஆலோசகர்கள் பாஸ்கர், குஞ்சிதபாதம் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...