நெல்லையில் உலக செவிலியர் தினம்:உறுதிமொழி ஏற்பு
இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், போரில் காயம்பட்ட வீரர்களுக்கு நேரம் பார்க்காமல் செவிலியப்பணி செய்து வந்தார். உலகின் முதலாவது செவிலியர் பயிற்சிப் பள்ளியையும் நிறுவி,


உலக செவிலியர் தினத்தையொட்டி திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், போரில் காயம்பட்ட வீரர்களுக்கு நேரம் பார்க்காமல் செவிலியப்பணி செய்து வந்தார். உலகின் முதலாவது செவிலியர் பயிற்சிப் பள்ளியையும் நிறுவி, செவிலியர்கள் அதிகளவில் உருவாக காரணமாக இருந்தார். அவரது பிறந்தநாளான மே 12-ம் தேதி உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக செவிலியர் அமைப்பின் கீழ் 1965-ம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலியில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. மருத்துவர் எஸ்.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் எஸ்.சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் ஈ.மதுமதி, செவிலியர் ஆர்.பானு ஆகியோர் வரவேற்றனர். மருத்துவர் எஸ்.பாக்கியம்பார்வதி பங்கேற்று பேசினார். நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்திற்கு பலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு உறுதிமொழியையும் செவிலியர்கள் ஏற்றனர். செவிலியர் வி.ராதா நன்றி கூறினார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவிலியர் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் வைரமுத்துராஜா, ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முகமதுஷாபி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நைட்டிங்கேல் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிமுடித்த 19 செவிலியர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத் தலைவர். பி.அந்தோனி, செயலர் டி.ஜெயலட்சுமி, செவிலியர் கண்காணிப்பாளர் (பொ) டி.மங்களம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...