மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவன் முன்னிலை

கடலூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவன் 10,980 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். 

Updated On :16 மே 2014, 4:36 am

கடலூர் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவன் 10,980 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். 

 கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிக்குட்பட்ட கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடலூர் பெரியார் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. 

 இதனைத்தொடந்து வெள்ளிக்கிழமை(மே16) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  கடலூர் தொகுதியில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 460 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 22 ஆயிரத்து 146 பெண் வாக்காளர்களும் 38 இதரர்களும் சேர்த்து மொத்தம் 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.
  இவர்களில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 889 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 96 ஆயிரத்து 523 பெண் வாக்காளர்களும் 3 இதரர்களும் சேர்த்து வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 83 ஆயிரத்து 415 ஆகும். வாக்கு பதிவு சதவீதம் 78.82 ஆகும்.

 முதல் சுற்று முடிவில் பெற்ற வாக்குகள் விவரம்: எ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 23,463, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1109, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)103, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)12,483, கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 501, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6781, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 64, சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 25, ச.ஆனந்தராஜன் 74, எஸ்.கிரிஜா 30, தி.சிவஞானசம்பந்தன் 78, ரா.செங்குட்டுவன்43, திருநாவுக்கரசு100, பாஸ்கர் 50, ராதாகிருஷ்ணன் 83, ராஜ்குமார் 423, ஜெயசங்கர் 353, நோட்டா 293

 முதல் சுற்றில் மொத்தம் 46,056 வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன். திமுக வேட்பாளர் நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 10980 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.