டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி கவிழ்ந்து ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று லாரி டயர் வெடித்ததில் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் சிகாமணி(55) பலியானார். மேலும் 6 பெண்கள் காயமடைந்தனர்

News image
Updated On :25 மே 2014, 11:04 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று லாரி டயர் வெடித்ததில் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் சிகாமணி(55) பலியானார். மேலும் 6 பெண்கள் காயமடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே ஆந்திர எல்லைப்பகுதியான பூண்டி பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி கண்ணாடிகள் ஏற்றி வந்த மினி லாரியை மடக்கிய பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சின்னகண்ணு மகன் சிகாமணி, அவரது மனைவி அஞ்சலி மற்றும் 5 பெண்கள் கூலி வேலைக்காக கும்மிடிப்பூண்டி வர அந்த மினி லாரியில் ஏறினர்.பெண்கள் லாரி டிரைவரின் அறைக்குள் உட்கார்ந்துக் கொள்ள , சிகாமணி லாரியின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணாடிகள் பெட்டிகள் மேல் அமர்ந்துக் கொண்டார்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதியில் இந்த லாரி வந்துக் கொண்டிருந்த போது லாரியின் பின் பக்க டயர் வெடித்ததில் லாரி நிலை தடுமாறி சாலையில் குப்புற கவிழ்ந்தது.இதனால் லாரியின் பின் பக்கம் அமர்ந்து வந்த சிகாமதி கண்ணாடிகளின் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் லாரியின் டிரைவர் அறையில் உட்கார்ந்திருந்த சாந்தி, அஞ்சலி,சந்திரமதி, சுசிலா, சரண்யா, அங்கம்மா ஆகியோர் காயமடைந்து பொதுமக்களால் மீட்கப்பட்டனர். இதில் சாந்தி படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து அறிந்து கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விரைந்து லாரியில் சிக்கியிருந்த பெண்களை மீட்டதோடு போக்குவரத்துக்குக்கு இடையூறாக இருந்த லாரியையும் அப்புறப்படுத்தினர். விபத்து நடந்த பகுதி எளாவூர் பேருந்து நிறுத்தப்பகுதி என்பதால் அதிர்ஷ்டவசமாக மினிலாரி சாலை பேருந்துக்காக காத்திருந்தவர்கள் இருக்கும் பகுதியில் கவிழாமல் சாலை நடுவே கவிழ்ந்ததால் பெரிய அளவில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது.

விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி உள்ள டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.