டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் துணை இயக்குநர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2014, 8:17 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குநர் ராஜேந்திரன் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் மம்சாபுரம் மற்றும் திருப்பத்தூர் பேரூராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையத்தை (வார்ஃபார் வாட்டர் திட்டம்) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நீர் சுத்திகரிப்புக்குப் பின்னர் வரும் கழிவு நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள கழிவு நீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டுவிட்டதாய் விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் இந்தக் குறையை உடனடியாக நிவிர்த்தி செய்ய உத்தரவிட்டார். குழாய் செப்பனிடப்பட்ட இடத்தை மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக் காலத்தில் பேரூராட்சி பகுதியின் எந்தவித தொற்றுநோயும் ஏற்படாத வகையில் அனைத்து வார்டுகளிலும் துப்புரவுப் பணிகள் தினமும் நடைபெற்று, கொசு மருந்துகள் முறைப்படி தெளிக்கப்படவேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மழைக் காலத்தில் இங்குள்ள வாழைக்குளம் கண்மாய் கரையில் எந்தவித உடைப்பும் ஏற்படாத வகையில் வருவாய்துறை அலுவலர்களுடன் இணைந்து தினமும் இரு பேரூராட்சி பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.பின்னர் பேரூராட்சி உரக் கிடங்கில் மரக்கன்றுகளை அவர் நட்டார்.
ஆய்வின் போது அவருடன் மண்டல அலுவலக கண்காணிப்பாளர் இப்ராஹிம்ஷா, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், பேரூராட்சி தலைவர் ராஜா, துணைத் தலைவர் ப.அய்யனார், செயல் அலுவலர் சித்திரைக்கனி, விவசாய சங்கத் தலைவர் முத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.