6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

News image
Updated On :4 நவம்பர் 2014, 11:50 am

முத்துகுமார்

திருநெல்வேலி அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்லமுயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் சுவாமிநாதன் தலைமையிலான குழு சோதனை செய்தது. அப்போது, மினி லாரி ஒன்று போலீஸாரைப் பார்த்ததும் நிற்காமல் விரைந்து சென்றது. சந்தேகமடைந்த போலீஸார் அந்த லாரியை விரட்டி வந்தனர். ஆனால்,மினி லாரியானது தாழையூத்து வரை வேகமாக வந்தது. தாழையத்து புறவழிச்சாலையில் வரும்போது வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு அதிலிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கீழே குதித்து தப்பியோடிவிட்டனர்.

பின்னால், வந்த போலீஸார் லாரியை சோதனையிட்டபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை லாரியுடன் கைப்பற்றிய போலீஸார், திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர். மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அரிசியை சோதனையிட்டதில் அவை ரேஷன் அரிசி என்பது உறுதி செய்யப்பட்டது. 30கிலோ, 20 கிலோ என மொத்தம் 85 மூட்டைகளில் 3 டன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்த போலீஸார், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.