
சோழவரம் அருகே கிணற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
சோழவரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் கிணற்றில் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்
சோழவரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் கிணற்றில் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட அலமாதி கிராமத்தில் வசித்தும் வரும் பாலகிருஷ்ணனின் மகன் கார்த்திக்(15), சூரப்பட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கார்த்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளான். கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது கார்த்திக் சேற்றி சிக்கி நீரில் மூழ்கியுள்ளான். உடன் குளித்து கொண்டிருந்த நண்பர்கள் கிணற்றில் இருந்து வெளியே வந்து இது குறித்து தகவலை அருகில் வசிப்பவர்களிடம் கூறியதாக தெரிகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட நேரம் தேடியும் கார்த்திக்கை மீட்க முடியாததால் செங்குன்றம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு துறை வீர்கள் கார்த்திக்கை சடலமாக மீட்டனர். தகவல் அறிந்த சோழவரம் போலீஸôர் கார்த்திக் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






