ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பருவ மழை நீடிப்பு: உயர்ந்து வரும் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு

News image
Updated On :16 நவம்பர் 2014, 8:20 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் நீடித்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 3, சேர்வலாறு 3, பாபநாசம் கீழ் அணை 6, மணிமுத்தாறு அணை 5.8, கடனாநதி அணை 2, கருப்பாநதி அணை 4, குண்டாறு அணை 5.2, அடவிநயினார் அணை 3, அம்பாசமுத்திரம் 3.2, சேரன்மகாதேவி 3.6, கன்னடியன் அணைக்கட்டு 4, செங்கோட்டை 7, தென்காசி 13.8, ஆய்க்குடி 15.6, ஆலங்குளம் 18.2, திருநெல்வேலி 137, பாளையங்கோட்டை 6.2. தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு 11, கடம்பூர் 24, கழுகுமலை 4, திருச்செந்தூர் 2, காயல்பட்டணம் 12, குலசேகரப்பட்டணம் 3.

வடகிழக்கு பருவ மழை நிகழ் பருவத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.15 அடி உயர்ந்து 117.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 130.28 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 1.70 அடி உயர்ந்து 82.90 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 75.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 81.50 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2003.36 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,495 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 110 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 40 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.