ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர் கூட்டமைப்பு சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பாலமுருகன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ராமசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன் மற்றும் வட்டாரச் செயலாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.
இதில், ஆவினில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே பரிசோதனை செய்து விலை நிர்ணயம் செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் பால் ஓப்புதல் சீட்டை நாள்தோறும் வழங்கவும், பால் வழித்தட ஊர்தியில் நடைபெறும் முறைகேடுகளை தலைவர்கள் புகார் அளித்தால் ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டமைப்பினர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

