உச்சிப்புளி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டையை போலீஸார் பறிமுதல் செய்து அது சம்பந்தமாக மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்த போவதாக உச்சிப்புளி தனிப்பிரிவு போலீஸார்க்கு ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி அப்பகுதியில் புதன் கிழமை இரவு தீவிர ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தன.அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின்படி சுற்றிதிரிந்த மூன்று பேரை போலீஸார் பிடித்து விசாரணை செய்துள்ளன.அவர்கள் விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக பேக்கு பையில் 6 சந்தன கட்டையை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சந்தன கட்டையை பறிமுதல் செய்த போலீஸார் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தின.விசாரணையில் பிரப்பன்வலசை பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் முனியசாமி(30),கன்னியாகுமாரி அருகே மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அனிஸ்ஜெனின்(23),சுபின்(24) ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
மேலும் இவர்கள் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக மார்த்தாண்டம் பகுதியிலிருந்து 2 அடி நீளத்தில் 6 சந்தன கட்டையை வாங்கி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளன.அதன் பின்னர் போலீஸார் மூவரையும் தங்கச்சிமடம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.மேலும் வனத்துறை அதிகாரிகள் இவர்கள் மீது வழக்கு பதிந்து கடத்தல் குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்

43 வயதிலும் நிற்காத வேகம்..! 5 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன்!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

