மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் நீடிப்பதால் குளிக்கத் தடை
வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 135 அடியாகவும், 143 அடி கொள்ளளவு கொண்ட


வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 135 அடியாகவும், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.25 அடியாகவும் உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளம் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு்ள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருவதால் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 7, சேர்வலாறு அணை 1, மணிமுத்தாறு அணை 1.8, நம்பியாறு அணை 4, கன்னடியன் அணைக்கட்டு 2, அம்பாசமுத்திரம் 4, நான்குனேரி 5, ஒட்டப்பிடாரம் 2, சாத்தான்குளம் 6.2, திருச்செந்தூர் 24, காயல்பட்டினம் 25, குலசேகரப்பட்டணம் 15, எட்டையபுரம் 1, விளாத்திகுளம் 1.2, கீழஅரசடி 1.
அணைகளின் நீர்வரத்து:
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1085.60 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 631 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 110 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 28 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 5 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 24 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 15 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 5 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையில் இருந்து 350 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் 20 கனஅடியும், கடனாநதி அணையில் 110 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், கருப்பாநதி, குண்டாறு அணைகளில் தலா 25 கனஅடியும், அடவிநயினார் அணையில் 45 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 121.25 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 135.00 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.35 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 74.50 அடியாகவும்,
ராமநதி அணையின் நீர்மட்டம் 80.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 66.63 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயரவில்லை.
சாகுபடி பணிகள் தீவிரம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனம் மற்றும் கடனாநதி, ராமநதி பாசனத்திலும் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஒரு சில இடங்களில் நாற்று நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், மேலச்செவல் பகுதியில் நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு நாற்று பாவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அருவியில் வெள்ளம்: நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் வியாழக்கிழமை மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் இருந்தது.
இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்லவும் அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...