ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2014, 5:58 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தாமிரவருணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலையில் தொடங்கி தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை வரை மழை நீடித்தது. அடை மழையால் மக்களின் இயல்வு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதி அடைந்தனர். மழையால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 132, பாபநாசம் கீழ் அணை 136, சேர்வலாறு அணை 76, மணிமுத்தாறு அணை 79.2, கடனாநதி அணை 45, ராமநதி அணை 45, கருப்பாநதி அணை 22, குண்டாறு அணை 4, அடவிநயினார் அணை 10, நம்பியாறு அணை 132, கொடுமுடியாறு அணை 70.

இதேபோல் நான்குனேரியில் அதிகபட்சம் 165, அம்பாசமுத்திரம் 93, சேரன்மகாதேவி 92, கன்னடியன் அணைக்கட்டு 97, களக்காடு 86.4, மூலக்கரைப்பட்டி 96, தென்காசி 35.2, செங்கோட்டை 92, ஆய்க்குடி 40.8, ஆலங்குளம் 113.2, ராதாபுரம் 139.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரில் அதிகபட்சம் 190.5, சாத்தான்குளம் 188, காயல்பட்டினம் 175, குலசேகரபட்டணம் 127, ஸ்ரீவைகுண்டம் 74, கோவில்பட்டி 33, எட்டையபுரம் 3, விளாத்திகுளம் 20, கீழஅரசடி 29, தூத்துக்குடி 88.5, ஒட்டப்பிடாரம் 42, மணியாச்சி 32, கயத்தாறு 24, கடம்பூர் 27, கழுகுமலை 38.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு்ள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து அதிகளவில் இருந்தது. பாணதீர்த்த அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள்
தெரிவித்தன.

பாபநாசம் கீழ் அணை, தாமிரவருணி கரையோர நகரங்களில் பலத்த மழை பெய்து வருவதால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரமாக வசிப்போர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.