பொதுமக்களை தேடி வருவாய் திட்டம் என்ற அம்மா திட்ட முகாமில் 23 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் டி.என்.ஹரிரஹரன் வழங்கினார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: இம்மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் தலை நகரத்திற்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக வருகின்றனர். இதுபோன்று வருகிறவர்கள் அலைந்து சிரமப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில் வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் நடத்தப்படுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
அதையடுத்து, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அதில் ஆய்வு செய்து தகுதியான 23 பேருக்கு பட்ட மாறுதல், வருமான சான்று, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், வீட்டு மனை பட்டா என 23 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரா.சித்ரா, வட்டாட்சியர் சிவஜோதி, தனி வட்டாட்சியர் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சின்னத்துரை, வருவாய் அலுவலர் நாகேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

