ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

140 அடியை எட்டியது பாபநாசம் அணை!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை ஞாயிற்றுக்கிழமை 140 அடியை எட்டியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு பிரதான அணையான பாபநாசம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2014, 5:07 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை ஞாயிற்றுக்கிழமை 140 அடியை எட்டியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு பிரதான அணையான பாபநாசம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

வடகிழக்கு பருவ மழை நிகழ் பருவத்தில் வழக்கத்தை விட 165.9 மி.மீ மழை அதிகமாக பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் வடகிழக்கு பருவ மழை காலத்தில் வழக்கமாக நிரம்புவதுண்டு. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சராசரியாக குறைந்ததால் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

4 ஆண்டுகளுக்கு நிகழ் பருவத்தில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 150.62 அடியாக இருந்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் தொடர்ந்து ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
143 அடி கொள்ளளவை கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 140 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 1707.52 கனஅடி நீர்வரத்து இருந்தது. ஓரிரு நாளில் அணை முழுக் கொள்ளளவை எட்டு்ம் நிலையில் உள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 805 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 16, பாபநாசம் கீழ் அணை , சேர்வலாறு அணை 9, மணிமுத்தாறு அணையில் 35.2, கடனாநதி அணை 5, அதிகபட்சம் ராமநதி அணையில் 45, கருப்பாநதி அணை 23, குண்டாறு அணை 7.2, அடவிநயினார் அணை 12,

நம்பியாறு அணை 1, கொடுமுடியாறு அணை 10, அம்பாசமுத்திரம் 8, சேரன்மகாதேவி 12.4, கன்னடியன் அணைக்கட்டு 10, களக்காடு 8.8, தென்காசி 13.4, ஆய்க்குடி 8.8, செங்கோட்டை 7, ஆலங்குளம் 28, ராதாபுரம் 1, நான்குனேரி 1. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் 1, கடம்பூர் 2, கீழஅரசடி 1.1.
பிற அணைகளின் நீர்மட்டம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 81.60 அடி, ராமநதி அணை 82 அடி, கருப்பாநதி அணை 64.64 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 95.75 அடி, வடக்குப் பச்சையாறு அணை 37.25 அடி, நம்பியாறு அணை 22.96 அடி, கொடுமுடியாறு அணை 52.50. நம்பியாறு அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் 510 கனஅடி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.