உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவை அருகே மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை கைது

தாம் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2014, 10:53 am

சீனிவாசன்

தாம் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் ராமய்யா. இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தங்களது 2வது மகள் உமாவுடன்(வயது 20) அண்மையில், கோவை சூலூர் அருகே குடியேறினர். ராமய்யாவும் உமாவும் அருகே ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள முதல் மகளைப் பார்க்க மாரியம்மாள் சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த உமாவை, ராமய்யா, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா அளித்த புகாரின் பேரில், போலீசார், ராமய்யாவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.