திருச்சியில் தொழிலாளி மர்மச்சாவு: அடித்துக்கொலையா என போலீஸார் விசாரணை
திருச்சியில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு


திருச்சியில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வுபெற்ற பெல் நிறுவன ஊழியர். இவரது மகன் ஆனந்தகுமார் (28. கட்டிடத் தொழிலாளியான இவர் திருமணமாகி மகாலட்டுமி என்ற மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பெற்றோரை விட்டு அதே பகுதியில் தனிக்குடித்தனம் இருந்து வந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு பீமநகர் பகுதியில் மயங்கிக் கிடந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால், குடித்துவிட்டு போதையில் மயங்கி கிடப்பதாக எண்ணி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் கொண்டு வந்து படுக்கச்செய்து விட்டு சென்று விட்டனர்.
ஆனால் மறுநாள் காலையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது கவனித்தபோதுதான் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்புதம், மூக்கிலிருந்து ரத்தம் வழிந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கிருச்சி நீதிமன்றம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசாரின் முதல் கட்டவிசாரணையில், சம்பவத்தன்று ஆனந்தகுமாரின் பெற்றோரை சிலர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை ஆனந்தகுமார் தட்டிக்கேட்டதில் அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிலர் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில்தான் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதனை அவர் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக நினைத்து அவரை வீட்டில் தூக்கிவந்து போட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...