அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் வெடிகுண்டு மற்றும் இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர் வேறு சிறைகளுக்கு மாற்றம்

சிதம்பரம் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம், இரட்டை கொலை வழக்கு ஆகிய வழக்குகளில் சம்பந்தப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள மோகன்ராம், சுரேந்தர், சத்யா ஆகிய 3 பேர் வேவ்வேறு சிறைகளுக்கு

News image
Updated On :4 அக்டோபர் 2014, 1:25 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம், இரட்டை கொலை வழக்கு ஆகிய வழக்குகளில் சம்பந்தப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள மோகன்ராம், சுரேந்தர், சத்யா ஆகிய 3 பேர் வேவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த மே.3-ம் தேதி மாரியப்பாநகரில் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் என்பவர் படுகாயமுற்றார். மேலும் அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதனை அடுத்து தொடர் சம்பவமான சிதம்பரம் அண்ணாமலைநகரில் கலுங்குமேட்டில் வசிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார் (34), அவரது தம்பி ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கடந்த செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் ஒன்று  வெடிகுண்டு வீசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர்.

இந்த இரு வழக்குகளிலிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம் (34), சீர்காழியைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யராஜ் (32), சிதம்பரம் கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த சுரேந்தர் (34) ஆகிய மூவரும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ளனர். இவ்வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம், சுரேந்தர் ஆகியோர் சிறைக்குள் இருந்தபடியே சிதம்பரம் இரட்டை கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. சத்யா வெடிகுண்டு வெடித்த வழக்கில், இரட்டை கொலை வழக்கிலும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். மூவரும் சிறையில் செல்போன்கள் பயன்படுத்தி பல்வேறு சதி திட்டங்கள் தீட்டியதாகக் கூறப்படுகிறது. சிறைக்காவல் நித்யானந்தம் மற்றும் காவலர்களுக்கு மூவரும் மிரட்டில் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் திருச்சி மத்திய சிறைக்கும், சுரேந்தர் சேலம் மத்திய சிறைக்கும், சீர்காழி சத்யா வேலூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.