விருதுநகர் அருகே பெண்ணிடம் 29 ஏக்கர் நிலம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலையடியான், கணேசன். இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஆவார்கள். இந்நிலையில் இவர்களிடம் மதுரை
Updated on
1 min read

விருதுநகர் அருகே பெண்ணிடம் 29 ஏக்கர் நிலம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலையடியான், கணேசன். இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் ஆவார்கள். இந்நிலையில் இவர்களிடம் மதுரை அழகப்பா நகரைச் சேர்ந்த சரஸ்வதி(60) என்பவர் 29.69 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினாராம். அதை முறையாக திருச்சுழி சார் பதிவாளர் அலுவலகத்திலும் பத்திர பதிவும் செய்துள்ளனர். அப்போது, ஆவணங்கள் தயார் செய்வதற்கு இரண்டு நாள்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பிய சரஸ்வதி மதுரைக்குச் சென்று விட்டாராம்.

அதற்கிடையே சார்-பதிவாளர் ஒத்துழைப்புடன் பத்திர ஆவணங்களை பெற்றுக் கொண்ட இருவரும், மீண்டும் வேறு ஒருவருக்கு விற்பதற்கு முயற்சித்துள்ளனர். இதற்கிடையே சரஸ்வதி ஆவணங்களை கேட்ட போது மேலும் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தால் தான் தருவோம் என இருவரும் மிரட்டினார்களாம்.இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் சரஸ்வதி புகார் அளித்தார். உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்வதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மலையடியான், கணேசன், பத்திர எழுத்தர் காத்தமுத்து, சார் பதிவாளர் லோகநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com