நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பெங்களூரு தீர்ப்பால் அதிமுகவினர் சோகம்

பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தமிழக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக வந்த செய்தியைத்

News image
Updated On :7 அக்டோபர் 2014, 1:43 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் பெங்களூரு உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுகவினர் சோகமடைந்தனர்.

பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தமிழக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக வந்த செய்தியைத் தொடர்ந்து பழனி பேருந்து நிலையத்தில் குவிந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். திரும்பிய இடமெல்லாம் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பியபடி வீதிகளில் சென்றனர்.  சிறிது நேரத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை என செய்தி வெளியாகவே கட்சியினர் சோகத்தில் மூழ்கினர்.  நெய்க்காரபட்டியில் பேருந்து நிறுத்தத்தில் கூடிய ஒன்றிய அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்குமுன் செய்தி வெளியானதால் வாங்கிய பொருட்களை பயன்படுத்த முடியாமல் வருத்தத்தில் ஆழ்ந்தனர். 

இந்நிலையில் பழனி அடிவாரம் ரோப்கார் நிலையம் அருகே நின்றிருந்த கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த சுனில் என்பவர் கார் மீது மர்மநபர்கள் கல்வீசி சென்றனர். பேருந்து நிலையம் அருகேயும் பெங்களூரை சேர்ந்த மினிவேன் மீது கல் வீசப்பட்டது.  இதைத் தொடர்ந்து போலீஸார் ஆங்காங்கு ரோந்துப்பணியை தீவிரப்படுத்தவே கல்வீச்சு சம்பவம் கட்டுப்படுத்தப்பட்டது.  இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வன்முறை செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்திய நிலையில் மாவட்ட நிர்வாகமும் அதை கண்டிப்பாக பின்பற்ற கூறியுள்ளது.  இந்நிலையில் விஷமிகள் செய்யும் இச்செயலால் அதிமுக மீது பழி விழுகிறது.  இன்றைய சூழலில் எந்த கட்சிக்காரர்கள் தவறு செய்தாலும் அதை அதிமுகதான் செய்வதாக பழி ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.