6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் பெண் குத்திக் கொலை

பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், மும்பையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (41). அழகுகலை பயிற்சி முடித்துவிட்டு,

News image
Updated On :9 அக்டோபர் 2014, 1:05 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட சமாதானபுரத்தில் பெண் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், மும்பையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (41). அழகுகலை பயிற்சி முடித்துவிட்டு, மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார்.இவரது சகோதரி விமலாவின் வீடு பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் செஞ்சுடர் தெருவில் உள்ளது. விமலா தனது கணவருடன் மஸ்கட் சென்றுவிட்டதால், தனது வீட்டில் வந்து தங்குமாறு விஜயாவிடம் கேட்டுக் கொண்டாராம். அதன்பேரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விஜயா தனது மகன்கள் கோகுல்ராஜ் (19), சோனேஸ்வரன் (17), விமலாவின் மகள் அனிதா ஆகியோருடன் சமாதானபுரத்தில் வசித்து வந்தார்.வியாழக்கிழமை காலையில் ஆட்டோவில் கடைக்குச் சென்றுவிட்டு விஜயா வீட்டுக்கு திரும்பினாராம். இந்நிலையில், பிற்பகலில் அவர்களது வீட்டின் படுக்கையறையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் விஜயா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.