மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சுங்கச் சாவடி அருகே அரசு பஸ் மோதி போலீஸ் பலி

வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் பஸ் மோதி தலைமைக் காவலர் ஒருவர்  உயிரிழந்தார்.

News image
Updated On :14 அக்டோபர் 2014, 3:43 am

சீனிவாசன்

வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் பஸ் மோதி தலைமைக் காவலர் ஒருவர்  உயிரிழந்தார்.

வாலாஜாவை சேர்ந்த முரளிதரன் (43) என்பவர்  ஸ்ரீ பெரும்புதுரில் போக்குவரத்து துறை தலைமை காவலராக பணி புரிந்து வந்தார். இவர் இன்று காலை வாலஜாவில் உள்ள தனது வீட்டில் இருந்து பணிக்கு சென்ற போது டூவீலரில் அந்த வழியாக வந்த ஒருவரிடம் லிப்டு கேட்டு சென்றுள்ளார். அப்போது தருமபுரியில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்து ஒன்று வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடி அருகே அவர் மீது மோதியதில் இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து போலீஸார வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.