நெல்லை அருகே வியாபாரி வெட்டிக்கொலை
பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆச்சிமடம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முருகன் (43). பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பொருள்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து


திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆச்சிமடத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் வியாபாரி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ஆச்சிமடம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முருகன் (43). பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பொருள்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரும், நாட்டார்குளம் பகுதியைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகனான பிளாஸ்டிக் வியாபாரி முருகனும் (35) நண்பர்கள். இவர்களுக்குள் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் ஆச்சிமடத்தில் தனது வீட்டில் திங்கள்கிழமை பிற்பகலில் வி.முருகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு பைக்கில் வந்த ஏ.முருகன் வெளியே அழைத்து தகராறு செய்ததோடு அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த வி.முருகனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரி்த்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...