இதற்காக பாண்டியம்மாளை கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி வீட்டிலேயே அறையில் பூட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை புவனா பாண்டியம்மாளிடம் எவ்வளவு பணம் உனக்கு வேண்டும் என்று கேட்டு,கேவலமாக பேசியுள்ளார். அப்போது மாரிமுத்து பாண்டியம்மாளுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் இரண்டு இலட்சம் ரூபாய் பணமும், இருபது பவுன் நகையும் தரவேண்டும். இல்லாவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என தெரிவித்துள்ளார். உறவினர்கள் முன்னிலையிலேயே பாண்டியம்மாள் தலைமுடியையும், சேலையையும் இழுத்து தகராறு செய்ததோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.